

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் தன்னிச்சையாக செயல் படுவதாகக்கூறி, கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறிய தாவது: வழக்கறிஞர்கள் சட்டத் தில் சென்னை உயர் நீதிமன்றம் கொண்டு வந்திருக்கும் திருத் தத்துக்கு தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல் வம் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளார். பார் கவுன்சிலில் உறுப்பினர்களாக இருக்கும் 24 பேரிடம் அவர் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ஆதரவு கொடுத்தது கண்டிக்கத்தக்கது.
இதை கண்டித்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். வழக்கறிஞர்களை பாதிக்கும் சட்டத் திருத்தம் குறித்து, தமிழகத்தில் உள்ள 255 வழக்கறிஞர்கள் சங்கங்களிடம் பார் கவுன்சில் தலைவர் செல்வம் கருத்து கேட்கவில்லை. எனவே, அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.