பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு: கருணாநிதி இரங்கல்

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு: கருணாநிதி இரங்கல்
Updated on
1 min read

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.

தமிழ்த் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்த கவிஞர் முத்துக்குமார் 'தங்கமீன்கள்' திரைப்படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலுக்காகவும், 'சைவம்' திரைப்படத்தில் அழகே அழகே என்ற பாடலுக்காகவும் தேசிய விருதுகள் பெற்ற கவிஞர்.

என் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட தம்பி நா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in