

சோழிங்கநல்லூரில் மனைவி, 10 மாதக் குழந்தையை கட்டை யால் அடித்துக் கொலை செய்த கொன்ற கல்லூரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அடுத்த சோழிங்க நல்லூர் கங்கை அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் பாஸ்கர் (34). செம்மஞ்சேரியில் தனியார் கல்லூரியில் வேலை செய்கி றார். இவரது மனைவி ரூத். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள், 10 மாத ஆண் குழந்தை உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த பாஸ்கர், மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்தார். அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அருகே இருந்த கட்டையை எடுத்து, மனைவியையும் குழந்தை களையும் பாஸ்கர் சரமாரியாக அடித்துள்ளார்.
மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில், மனைவி ரூத்தும், 10 மாதக் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். 3 வயது பெண் குழந்தை பலத்த காயமடைந்த நிலையில் மயங்கி விழுந்தாள்.
குழந்தைகளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். செம்மஞ் சேரி போலீஸார் விரைந்து வந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தையை சிகிச்சைக் காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரூத் மற்றும் 10 மாதக் குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். போதையில் இருந்த பாஸ்கரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.