Published : 07 Apr 2017 08:35 AM
Last Updated : 07 Apr 2017 08:35 AM

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் 124 புதிய டிஜிட்டல் சிசிடிவி கேமராக்கள்: கோட்ட மேலாளர் தகவல்

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலை யங்களில் பயணிகள் பாதுகாப் புக்காக புதிதாக 124 டிஜிட்டல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர் களிடம் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அனுபம் சர்மா நேற்று கூறியதாவது:

நாடு முழுவதும் 2016-17ம் ஆண் டில் 822 கோடி பேர் ரயில்களில் பயணித்துள்ளனர். பயணிகள் மூலம் ரூ.47,400 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத் தில் 2015-16ம் ஆண்டில் பயணிகள் மூலம் ரூ.1,791.78 கோடி வரு மானம் கிடைத்தது. 2016-17ம் ஆண்டில் இது ரூ.1,862.84 கோடி யாக உயர்ந்துள்ளது. இது 3.97 சதவீத உயர்வாகும். அதேசமயம், வார்தா புயல் பாதிப்பால் சரக்கு போக்குவரத்து வருமானம் குறைந் துள்ளது. சரக்குப் போக்குவரத்து மூலம் கிடைத்த வருமானம் 2015-16ல் ரூ.1,226.09 கோடியாக இருந்தது. இது 2016-17ல் ரூ.1,067.22 கோடியாக குறைந் துள்ளது. இது 12.96 சதவீத சரி வாகும். 2016-17ல் சென்னை ரயில்வே கோட்டத்தில் 2,098 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

புதிய டிஜிட்டல் சிசிடிவி

பயணிகள் பாதுகாப்புக்காக சென்னை சென்ட்ரலில் 50, எழும் பூரில் 28, தாம்பரத்தில் 22, பேசின் பாலம், மூர் மார்க்கெட் ரயில் நிலையங்களில் தலா 12 என மொத்தம் 124 புதிய டிஜிட்டல் சிசிடிவி கேமரா பொருத்தப்பட் டுள்ளன. அந்த ரயில் நிலையங் களில் ஏற்கெனவே 151 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட் டிருப்பது குறிப்பிடத்தக்கது. காட்பாடி ரயில் நிலையத்தில் 42 புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெண் பயணிகள் பாதுகாப்புக்காக கூடு தல் ஆர்பிஎஸ்எஃப் கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் அரக்கோ ணம் மற்றும் எண்ணூர் திரு வொற்றியூர் இடையிலான 4-வது ரயில் பாதை பணிகள் முற்றிலும் முடிவடைந்துள்ளன. வாலாஜா பாத்தில் சரக்கு ரயில் முனையம் செயல்படத் தொடங்கியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இரட்டை நடைமேடை விரிவாக்கப் பணிகள் முடிந்துவிட்டன. சென்னை கோட்டத்தில் ஒரு இடம் தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் ஆளில்லா ரயில்வே கிராசிங் பாதைகள் மூடப்பட்டுவிட்டன.

முன்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 87.2 சதவீத அளவுக்கு சரியான நேரத்துக்கு வந்துசென்றன. இது தற்போது 89.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. புறநகர் மின்சார ரயில்களைப் பொறுத்தவரை இது 90.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x