எம்பிபிஎஸ் படிப்புக்கு செப்டம்பரில் 2-ம் கட்ட கலந்தாய்வு

எம்பிபிஎஸ் படிப்புக்கு செப்டம்பரில் 2-ம் கட்ட கலந்தாய்வு
Updated on
1 min read

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் (சுயநிதி) கல்லூரிகளில் 122 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 12 பிடிஎஸ் இடங்கள் மற்றும் 17 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கான 970 பிடிஎஸ் இடங்கள் மீதம் உள்ளன. இதற் கான 2-ம் கட்ட கலந்தாய்வை செப்டம்பர் 20-க்குப் பிறகு நடத்த திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் செல்வராஜன் கூறும்போது, “அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக கொடுக் கப்பட்டுள்ள 397 எம்பிபிஎஸ் இடங்கள், 15 பிடிஎஸ் இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. அங்கு நிரப்பப்படாமல் திருப்பி அளிக்கப்படும் இடங்கள் மற்றும் மீதமுள்ள இடங்களுக்கு செப்டம்பர் 20-ம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு தொடங்கும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in