

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேதுசமுத்திரம் திட்டம் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வருகிறார். அவர் நாளை மறுநாள் ஹெலிகாப்டர் மூலமாக சேது சமுத்திர திட்டத்தை ஆய்வு செய்கிறார்.
மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். நாளை காலை தமிழகம் வரும் அவர், எண்ணூர் மற்றும் சென்னைத் துறைமுகத்தை ஆய்வு செய்கிறார். அதன்பின் மாலை கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் நடைபெறும் சென்னை வர்த்தக சபையின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இதையடுத்து நாளை மறுநாள் (4-ம் தேதி) ஹெலிகாப்டர் மூலமாக அவர் சேதுசமுத்திர திட்டத்தை ஆய்வு செய்கிறார். கடைசியாக ராமேசுவரம் கோயிலுக்கு சென்றுவிட்டு, தமிழகத்தில் இருந்து புறப்படுகிறார்.