

வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய கனமழையோ பெய்யும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காற்று மண்டலத்தில் மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சியின் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சென்னை நகரின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரையில் பலத்த மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாலை 5.30 வரையிலான 24 மணிநேரத்தில், நுங்கம்பாக்கத்தில் 35 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 11.4 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.