

பெட்ரோல், டீசல் விலை நிர்ண யத்தில் காங்கிரஸ் அரசின் தவறான கொள்கையைத்தான் தற் போதைய பாஜக அரசும் பின் பற்றுவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் அவர் நேற்று கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது, மளிகைப் பொருட்களின் தற்போதைய விலையை 2011-ம் ஆண்டுடன் ஒப்பிட்டு, விலை உயர்ந்துள்ளது. அதற்கு இந்த அரசுதான் காரணம் என்பதுபோல தெரிவித்தார். அகில இந்திய அளவில் தேவை, கிடைக்கும் அளவு, பெட்ரோல், டீசல் விலை என பல காரணங்களால் அத்தியாசியப் பொருட்களின் விலை உயர்கிறது. இதில் எதையுமே மாநில அரசு நிர்ணயிக்க முடியாது.
இருப்பினும், தமிழக அரசின் திட்டங்களால் மக்களை விலை வாசியின் தாக்கம் பாதிப்பதில்லை. உர விலையை உயர்த்தியதும், சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதும் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசுதான். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் போக்குவரத்து செலவு அதிகமாகி, பொருட்களின் விலையும் உயரும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பான முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கையைத்தான் தற் போதைய பாஜக அரசும் கடை பிடிக்கிறது என்றார்.