பிஎஸ்எல்வி சி-35 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாசன் வாழ்த்து

பிஎஸ்எல்வி சி-35 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாசன்  வாழ்த்து
Updated on
1 min read

பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட்டை 8 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி.35 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

இந்த ராக்கெட்டில் இந்தியாவின் மூன்று செயற்கைகோளும் அமெரிக்கா, கனடா, அல்ஜீரியா, ஆகிய நாட்டின் ஐந்து செயற்கைக்கோள்களும் சேர்த்து செலுத்தப்பட்டு இருக்கிறது. இந்த செயற்கைக்கோள் மூலம் வானிலை ஆராய்ச்சி, பருவநிலை மாறுதல்கள் போன்றவற்றை துல்லியமாக கணிக்க முடியும் என்று தெரியவருகிறது.

நமது நாட்டில் இருந்து உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி.35 ராட்கெட் பல்வேறுவகையில் உலகளவிலும் இந்திய நாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ராக்கெட் உருவாவதற்கு பாடுபட்ட தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், இந்திய அரசிற்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in