சரக்கு, சேவை வரியால் கைத்தறிக்கு பாதிப்பில்லை: கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் தகவல்

சரக்கு, சேவை வரியால் கைத்தறிக்கு பாதிப்பில்லை: கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் தகவல்
Updated on
1 min read

சரக்கு மற்றும் சேவை வரியால் கைத்தறிக்கு பாதிப்பு இல்லை என்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் டி.என்.வெங்கடேஷ் தெரிவித்தார்.

திருமணம் மற்றும் பண்டிகை காலத்துக்கான பட்டு, பருத்தி சேலைகள் கண்காட்சியை உதகையில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நேற்று தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: வாடிக்கையாளர் களின் ரசனையை கருத்தில் கொண்டு, பட்டு மற்றும் பருத்தி சேலை ரகங்களில் புதிய நவீன வடிவமைப்புகளை, கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் அறிமுகப் படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ரூ.315கோடிக்கு விற்பனை செய் யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.340 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

இந்த ஆண்டு, 25 பெருநக ரங்களில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ரூ.10 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐடி ஊழியர்கள் மத்தியில் விழிப் புணர்வு அதிகரித்து, நெசவாளர் களின் வாழ்வாதாரம் உயர கைத்தறி சேலைகளை வாங்கு கின்றனர். குறிப்பாக, ‘ஆர்கானிக் காட்டன்’ கைத்தறி சேலைக ளுக்கு மவுசு அதிகமாக உள் ளது. இதனால், தறிகளின் எண் ணிக்கை 12-லிருந்து 120-ஆக உயர்ந்துள்ளது.

ஆன்லைனிலும் விற்பனை நடக்கிறது. www.cooptex.com என்ற இணையதளம் மூலமாக ஆர்டர் செய்யலாம்.

மேலும், சென்னிமலையில் இருந்து படுக்கை, மேஜை விரிப்பு கள், சமையலறை மேட்கள் உள் ளிட்டவை ஜெர்மனி, இங்கி லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. கடந்த ஆண்டு ரூ.4 கோடி மதிப்பிலான பொருட் கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரி யால், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத் துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. நெசவாளர்களிடம் இருந்து நேரடி யாக கொள்முதல் செய்வதால், வரி விதிப்பு இருக்காது. ஆனால், ஆயத்த ஆடைகளுக்கு 12 சதவீத வரி விதிக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in