

தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அந்நிய செலாவணி வழக்கில் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான தினகரன் மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவிருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது போன்ற கூட்டம் நடைபெறாது, நடத்த முடியாது என்று அவைத்தலைவர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.
ரத்தாகும் டெண்டர்கள்?
சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், தினகரன் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டெண்டர்களை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.