

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டப்பேரவையில் ஜனநாயகம் கேலிக் கூத்தாக மாறி இருக்கிறது. மக்கள் மன் றத்தை நாடி ஜனநாயகத்தை நி லைநாட்டுவதே சரியான தீர்வாக இருக் கும். சட்டப்பேரவையில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு ஆளுநர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவை காவலர் களால் தாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சட்டப்பேரவையை கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டியது பேரவைத் தலைவரின் கடமை.
சட்டப்பேரவை வளாகத்தில் உறுப் பினர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது ஆளும் கட்சியின் பொறுப்பு. சட்டப்பேரவையில் இதுபோன்ற விரும் பத்தகாத நிகழ்வுகள் நடப்பது ஆளுங் கட்சியின் பலவீனத்தையே எடுத்துக் காட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.