

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீது 4-வது நாளாக விவாதம் நடந்தது. விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் சேகர்பாபு சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. சுவாதி கொலை வழக்கு உள்பட பல வழக்குகளிலும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழக காவல்துறைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன. அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது'' என்றார்.
இதனைத் தொடர்ந்து, சேகர்பாபுவுக்கு பேச கூடுதல் நேரம் ஒதுக்குமாறு திமுக உறுப்பினர்கள் அனுமதி கோரினர்.
அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுக்கவே திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.