பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வில் திருச்சியைச் சேர்ந்த ஜி.சுதா முதலிடம் : 150-க்கு 138 மதிப்பெண் பெற்றார்

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வில் திருச்சியைச் சேர்ந்த ஜி.சுதா முதலிடம் : 150-க்கு 138 மதிப்பெண் பெற்றார்
Updated on
1 min read

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் திருச்சியைச் சேர்ந்த ஜி.சுதா 150-க்கு 138 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தார். 137 மதிப்பெண் பெற்ற வேலூர் கே.பரமகுருவுக்கு 2-ம் இடம் கிடைத்தது.

அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்களையும் யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்ளும் வகையில் பெயர், பதிவு எண், இடஒதுக்கீடு, கல்வித் தகுதி, மதிப்பெண் விவரங்கள் அரசு தேர்வுத்துறையின் இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக இந்த பட்டியலை தெரிந்துகொள்ளலாம்.

ஆய்வக உதவியாளர் தேர் வில் திருச்சியைச் சேர்ந்த பட்ட தாரி பெண் ஜி.சுதா 150-க்கு 138 மதிப்பெண் பெற்று முதலிடத் தையும், வேலூரைச் சேர்ந்த பட்டதாரி கே.பரமகுரு 137 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

எழுத்துத்தேர்வு மதிப்பெண், கூடுதல் கல்வித்தகுதி, வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி), பணிஅனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிநியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு அதிகபட்சம் 10 மதிப் பெண், கூடுதல் கல்வித்தகுதிக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண்ணும், பணி அனுபவத்துக்கு 2 மதிப் பெண்ணும் நிர்ணயிக்கப்பட் டுள்ளன. எனவே, மொத்தமுள்ள 167 மதிப்பெண்ணில் தங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்பதை விண்ணப்பதாரர்களே கணக்கிட்டுக்கொள்ள முடியும்.

எழுத்துத்தேர்வு மதிப்பெண், கூடுதல் கல்வித்தகுதி, வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி), பணிஅனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிநியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in