

போலி சான்றிதழ் அடிப்படையில் கடன் தள்ளுபடி கோரிய பெண் விவசாயிக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள் ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கூனான்சே ரியை சேர்ந்தவர் விவசாயி ஆர். பேபி. கூனான்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பெற்ற விவசாய கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில் பேபி மனு தாக்கல் செய்தார்.
அதில் தனது மனுவில், சொந்த மாக 4.87 ஏக்கர் நிலம் வைத்துள் ளேன். கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகள் பட்டியலில், எனது பெயர் இடம் பெறவில்லை. எனவே எனது விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ். வைத்திய நாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, மனுதாரர் 3.19 ஏக்கர் நிலத்துக்கு தனியாகவும், 2.70 ஏக்கர் நிலத்தின் பெயரில் தனியாகவும் விவசாயக் கடன் பெற்றுள்ளார்.
அவர் 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ளார். 2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள் சிறு விவசாயிகள் என்றும், 2.5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் குறு விவசாயிகள் என தரம் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மனுதாரர் கடன் சலுகை பெறுவதற்காக தனக்கு குறைவாக நிலம் இருப்பதாக போலி சான்றிதழ் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போது அவருக்கு அதிக நிலம் இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு கடன் தள்ளுபடி சலுகை வழங்க முடியாது என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வறட்சியால் வாழ்வாதாரத்தை இழந்த சிறு, குறு விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் தமிழக அரசு விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி என அறிவித்துள்ள நிலையில், கூடுதல் நிலம் வைத்திருப்பவர்கள் போலி சான்றிதழ் அடிப்படையில் கடன் தள்ளுபடி சலுகை கோருவது துரதிருஷ்டவசமானது.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால் 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கும் கடன் தள்ளுபடி வழங்க நேரிடும்.
இதனால் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவர். சிறு, குறு விவசாயி களை பொறுத்தளவில் விவசாயம் தான் வாழ்வாதாரம். 5 ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கு அது மட்டுமே வாழ்வாதாரமாக இருக் காது.
மனுதாரரின் செயல்பாடு கண் டிக்கத்தக்கது. அவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கும் குறையாமல் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், மனுதாரரும் ஒரு விவசாயி என்பதால் அபராதம் விதிக்கப்படவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.