

இலங்கை அரசு கைப்பற்றிய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று மீன்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் உ.மதி வாணன் (கீழ்வேளூர்) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:
பாரம்பரிய மீன்பிடி பகுதிகளான பாக் நீரிணை பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். மீனவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா அரசு எடுத்த நடவடிக்கைகளால் அதிமுக ஆட்சியில் மட்டும் இலங்கை சிறைகளில் இருந்து 2,481 மீனவர் கள் தமிழகம் அழைத்து வரப் பட்டுள்ளனர். 357 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையால் புனையப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2011 நவம்பர் முதல் இலங்கை சிறையில் வாடிய 5 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 102 படகுகளை விடுவிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரு கிறது. விரைவில் படகுகள் மீட்கப்படும்.
கடலுக்கு மீன்பிடிக்கச் செல் லும் மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்ப தேவையான நடவடிக்கைகள் அதிமுக அரசு எடுத்து வருகிறது.
ரூ.48 கோடி செலவில் 30 ஆயி ரம் ஆபத்து கால எச்சரிக்கை தகவல் பரப்பும் கருவிகள் மீனவர்களுக்கு 90 சதவீத மானி யத்தில் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. தேவையான இடங் களில் ஆய்வு நடத்தப்பட்டு தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். ரூ. 64 கோடியில் வாக்கிடாக்கி வழங்கவும், ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் 11 இடங்களில் சூரியசக்தி வழிகாட்டும் விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக் குமார் தெரிவித்தார்.