வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள் இயக்கம்

வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள் இயக்கம்
Updated on
1 min read

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் இருந்து திருப்பதி, செகந்திரா பாத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக வேளாங்கண்ணி-திருப்பதி இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண்.07062) செப்டம்பர் 6-ம் தேதி இயக்கப் படுகிறது. இந்த ரயில் வேளாங் கண்ணியில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு திருப்பதி சென்றடையும்.

இதேபோல் வேளாங்கண்ணி-செகந்திராபாத் இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (07059) செப்டம்பர் 8-ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 8 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in