

பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக சி.ஆர். சரஸ்வதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஏற்கெனவே சி.வி.இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த வேட்பாளர் நீக்கப்பட்டு, சி.ஆர்.சரஸ்வதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக நேற்று (செவ்வாய்கிழமை) அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டார். அத்தொகுதியின் புதிய வேட்பாளராக வைகை செல்வன் அறிவிக்கப்பட்டார்.
இன்று தமிழகம், புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர்கள் மொத்தம் 10 பேர் மாற்றப்பட்டனர். ஆட்சி மன்ற குழு பரிசீலித்து இம்முடிவை எடுத்துள்ளதாக அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. | அதன் விவரம் > >அதிமுக வேட்பாளர்கள் 10 பேர் மாற்றம்: ஜெயலலிதா அறிவிப்பு
இந்நிலையில், தற்போது பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக சி.ஆர். சரஸ்வதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை இரண்டே நாட்களில் மூன்றாவது முறையாக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.