Published : 05 Sep 2016 03:30 PM
Last Updated : 05 Sep 2016 03:30 PM

விருத்தாசலம் அருகே சிறுத்தை நடமாட்டமா? - மக்கள் பீதி

விருத்தாசலம் அருகே வி.சாத்த மங்கலம் கிராமம் இருளர் குடியிருப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது நெல் அறுவடை பணிகள் நடந்து வருவதால் நேற்று முன்தினம் நள்ளிரவில் அறுவடை இயந்திரங்களின் ஓட்டுநர்கள் அப்பகுதியில் ஓய்வெ டுத்துக் கொண்டிருந்தனர்.

அப் போது விளை நிலங்களுக்கு செல்லும் சாலையில் சிறுத்தை நடமாடியதாகக் கூறப்படுகிறது. இதைப்பார்த்த ஓட்டுநர்கள், குடியி ருப்பு பகுதிக்கு சென்று இதுபற்றி கூறியுள்ளனர். இதனால் அப்ப குதி மக்கள் அனைவரும் திரண்டு வந்து சிறுத்தையை தேடியுள்ள னர். அப்பகுதியில் எந்த விலங்குகளும் தென்படாததால் அங்கிருந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் காலடித் தடம் போன்று காணப் படுவதால் மக்கள் பீதியடைந் துள்ளனர். இதன் காரணமாக விவசாய நிலங்களில் வசித்து வந்த குடும்பத் தினர் தங்களது கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் அடைத்து வைத்து ள்ளனர். மேலும் பெண்களும், குழந்தைகளும் வீட்டிற்கு வெளியே பூட்டிவிட்டு வீட்டினுள் ளேயே அடைந்து கிடக்கின்றனர்.

இதனிடையே அப்பகுதி இளை ஞர்கள் இரவில் தீப்பந்தங்களை ஏந்திய வாறு விடிய விடிய காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்து றையினர் சிறுத்தையின் தடம் என கூறப்பட்ட காலடித் தடங்களை சேகரித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x