

கல்விக் கடனை திருப்பிச் செலுத்து மாறு கெடுபிடி செய்ய வேண்டாம் என வங்கிகளுக்கு அறிவுரை கூறி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி) கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் நேற்று உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
கல்விக் கடனை வசூலிக்க வங்கிகள் கெடுபிடி செய்து வருகின் றன. கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. தற்போது கடனை திருப்பிச் செலுத்துமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கல்விக் கடன் பெற்ற இளைஞர்களிடம் கெடுபிடி செய்து வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட லெனின் என்ற இளைஞர் மதுரை யில் தற்கொலை செய்து கொண் டுள்ளார். கல்விக் கடனை வசூ லிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கிய சலுகையை மாணவர் களுக்கே வங்கிகள் வழங்கலாம்.
தமிழகம், கேரளத்தில்தான் அதிக அளவு கல்விக் கடன் கொடுக் கப்பட்டுள்ளது. கேரளத்தில் இது போல வங்கிகள் கெடுபிடி செய்த போது வங்கிகளுக்கு அறிவுரை கூறி அந்த மாநில சட்டப்பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்பிறகே வங்கிகளின் கெடுபிடி குறைந்தது. கேரளத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவை யிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கெடுபிடி செய்யும் வங்கிகள், தனியார் நிறு வனங்களிடம் இருந்து மாணவர் களை காப்பாற்ற வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப் படாததால் லட்சக்கணக்கான ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை முடித்து விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தேவையான இடங்களில் பள்ளிகளை நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி இல்லாத இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை தொடங்க வேண்டும். திருச்சுழியில் கடந்த திமுக ஆட்சியில் அறிவிக் கப்பட்ட மதுரை காமராஜர் பல் கலைக்கழகத்தின் உறுப்புக் கல் லூரி அமைக்கப்படவில்லை. பிற் படுத்தப்பட்டவர்கள், பெண்களின் கல்வியை கருத்தில் கொண்டு இந் தக் கல்லூரியை அமைக்க வேண் டும். ஆய்வக உதவியாளர் பணி யிடங்களுக்கு எழுத்துத் தேர்வு எழுதிவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருப்பவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி வேலை வழங்க வேண்டும். இவ்வாறு தங்கம் தென்னரசு பேசினார்.