திருப்பூரில் உள் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி தீக்குளித்து தற்கொலை: கடிதம் எழுதியுள்ளதாக போலீஸார் தகவல்

திருப்பூரில் உள் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி தீக்குளித்து தற்கொலை: கடிதம் எழுதியுள்ளதாக போலீஸார் தகவல்
Updated on
1 min read

அருந்ததியருக்கான 6 சதவீத உள் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி, திருப்பூரில் ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் மகேஷ்வரன்(35) தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

திருப்பூர் நெருப்பெரிச்சல் அருகே வாவிபாளையத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரன். ஆதித் தமிழர் பேரவையின் வடக்கு மாவட்ட துணைத் தலைவர். பின்னலாடை நிறுவனத் தொழிலாளி. திருப்பூர் பூங்கா சாலையில் கடந்த 11-ம் தேதி இரவு மகேஸ்வரன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீஸார் அவரது சடலத்தை கைப்பற்றினர். சடலம் அருகே, தற்கொலை முடிவு தொடர்பாக அவர் எழுதி வைத்திருந்த கடிதங்கள் கைப்பற்றப்பட்டன.

கடிதத்தில், அருந்ததியர் சமூகத்துக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவப்படி 6 சதவீத உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். நீலவேந்தன் வழியில் இம்முடிவை எடுத்ததாக கடிதத்தில் எழுதி உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in