ஐக்கிய அரபு நாடுகளில் தவித்த 11 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்

ஐக்கிய அரபு நாடுகளில் தவித்த 11 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்
Updated on
1 min read

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள சிறையில் சிக்கி தவித்த 11 தமிழர்கள் நேற்றிரவு சென்னை திரும்பினர். அவர்களை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் சில ஆண்டுக ளுக்கு முன்பு மீன்பிடி வேலைக்காக ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றனர். இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு அஜ்மன் என்ற இடத்தில் 2 விசைப் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, உடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த கமீஸ் என்ற அரேபிய மீனவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

இதன் பேரில், தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டு வந்தனர். நீதிமன் றம் உத்தரவிட்டும், அவர்கள் 2 ஆண்டுகளாக விடுவிக்கப்பட வில்லை. இதற்கிடையே 23 தமிழக மீனவர்கள் குற்றமற்றவர்கள் என்று மீண்டும் அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில், 12 மீனவர்கள் கடந்த 12-ம் தேதி இரவு தாயகம் திரும்பினர்.

மீதமுள்ள 11 மீனவர்கள் நேற்றி ரவு விமானம் மூலம் சென்னை வந் தனர். அவர்களை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார். உறவினர்களை கண்ட தும் உணர்ச்சி பெருக்கில் மீனவர்கள் கண்ணீர்விட்டு அழுதனர். அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் மீனவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in