

கட்டாய தலைக்கவச உத்தரவை எதிர்த்து போராடிய மதுரை வழக்கறிஞர்கள் 5 பேர் நிரந்தரமாக தொழில்புரிய தடை விதித்து கர்நாடக பார்கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருசக்கர வாகனங்களில் செல் வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மதுரையில் வழக்கறிஞர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், நீதித்துறை குறித்தும் விமர்சனங்களை தெரிவித்திருந் தனர். இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மாவட்ட நீதிமன்றங்களைச் சேர்ந்த 40-க் கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. பின்னர், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராம சாமி, வழக்கறிஞர்கள் சங்கரநாரா யணன், ஆறுமுகம் உள்ளிட்ட 13 பேர் மீதான விசாரணை இந்திய பார்கவுன்சில் உத்தரவுப்படி கர் நாடக பார்கவுன்சிலுக்கு மாற்றப்பட் டது. இதையடுத்து புகாரை விசா ரித்த கர்நாடக பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் ஏ.கே.ராமசாமி, தர்மராஜ், சங்கரநாராயணன், ஆறுமுகம்,நெடுஞ்செழியன் ஆகிய 5 பேரின் பெயர்களை பார்கவுன்சில் பதிவில் இருந்து நீக்கியும், மேலும் 8 பேர் 3 ஆண்டுகள் தொழில்புரிய இடைக்கால தடை விதித்தும் உத்தர விட்டுள்ளது. இந்த உத்தரவு மதுரை வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.