

சென்னை மெரினாவில் போராட்டத் தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மத்திய அரசின் தூண்டுதலால்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ் ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மெரினாவில் அமைதியாக நடந்த போராட்டத்தில் கடந்த 23-ம் தேதி அதிகாலையிலேயே போலீ ஸார் அடக்குமுறையை தொடங்கி விட்டனர். தமிழகத்தில் ஒரே நேரத் தில் தாக்குதல் நடத்த மாநில அரசு திட்டமிட்டது. இதற்கு மத்திய அரசின் தூண்டுதல் முக்கிய காரணமாகும்.
கோவையில் தோழர் என்று சொன்னவர்களை அந்த வார்த் தையை பயன்படுத்தக்கூடாது என கூறி போலீஸார் தாக்கினர். காவல் துறையினரின் நடவடிக்கையை முதல்வர் நியாயப்படுத்தக் கூடாது. இதற்கு நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மெரினாவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் வறட்சியால் சுமார் 200 விவசாயிகள் உயிரிழந் துள்ளனர். ஆனால் 17 பேர் மட்டுமே இறந்ததாகக் கூறுவது சரியானதல்ல. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெற சட்டப்பேரவையில் சட்டம் கொண்டுவர வேண்டும்.
மேலும், லோக் ஆயுக்தா எனப்படும் ஊழல் தடுப்புச் சட்டமும் கொண்டுவர வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தேதியை விரைவில் அரசு அறிவிக்க எடுக்க வேண்டும் என்றார்.