

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
அவர் காலை 10.00 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தலைவராக பொறுப்பேற்று கொள்கிறார் என தமிழக காங்கிரஸ் கட்சி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மேலிடம் மீது குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ஞானதேசிகன் ராஜினாமா செய்தார். இதையடுத்து இளங்கோவனை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றுக் கொள்கிறார்.