Last Updated : 06 Sep, 2016 04:47 PM

 

Published : 06 Sep 2016 04:47 PM
Last Updated : 06 Sep 2016 04:47 PM

திருமழிசை டவுன்ஷிப்: பெருக்கெடுக்கும் கவலைகள்!

தமிழக அரசு, திருமழிசையில் தமிழ்நாடு குடியிருப்பு வாரியத்தின் நிலப்பகுதியில் சுமார் ரூ.310.42 கோடி திட்ட மதிப்பீட்டில், பொது தனியார் கூட்டமைப்பின் (PPP)கீழ் டவுன்ஷிப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

சென்னை மக்களின் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பரவியிருந்த கடைசி பசும்பரப்பு சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை. அதுவும் இப்போது முழுமையாக அழிக்கப்பட்டு, தரமில்லாத சாலையாக மாற்றப்பட உள்ளது. இது திருவள்ளூர் மாவட்டத்தில் திருமழிசை டவுன்ஷிப்பை உருவாக்குவதற்கான முன்னெடுப்பு.

ஆனால், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் டவுன்ஷிப் யோசனையை முற்றிலுமாக எதிர்த்தனர். ஆனால் கடைசியில் இது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட செயல் என்று தெரியவந்தது. ஆனாலும் இந்த திட்டத்தால் ஏற்பட உள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த பயத்துடன் கிராம மக்கள் உள்ளனர்.

பர்வதராஜபுரம், நரசிங்கபுரம் மற்றும் குத்தம்பாக்கத்தைச் சேர்ந்த கிராம மக்கள், தங்களின் வளமான விவசாய நிலங்கள் கான்கிரீட் காடுகளாக மாறப்போவதை வேதனையோடு பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதனால் டவுன்ஷிப்புக்கு ஏற்பட உள்ள விளைவுகளையும், அதனால் நகரத்தில் வடக்குப்பகுதிக்கு ஏற்படும் பாதிப்புகளையும் எண்ணுகின்றனர். அத்தோடு செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் நீரைத் தடுப்பதால் ஏற்பட உள்ள சூழலியல் பாதிப்பு குறித்து அதிகம் கவலைப்படுகின்றனர்.

தற்போது சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் இருந்து கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

எந்த பாடத்தையும் கற்கவில்லை

குத்தம்பாக்கம் கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவரான இளங்கோ, இது குறித்து அந்த சாலையிலிருந்தே நம்மிடம் பேசினார்.

''மாநில அரசு, கடந்த வருட வெள்ளத்தில் இருந்து எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பதை இங்கு வேதனையுடன் குறிப்பிட்டாக வேண்டும்.

போன வருடம் டிசம்பரில், வரவுள்ள டவுன்ஷிப் பகுதி முழுக்கவும், 10 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருந்தது. இதனால் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலைப் போக்குவரத்து சில நாட்களுக்குப் பாதிக்கப்பட்டது. இனி பெரிய அளவில் மழை வந்தால், திருமழிசை, மதுரவாயல், திருவேற்காடு மற்றும் அண்ணாநகரின் கீழ்நிலைப்பகுதிகள் என்னவாகும் என்று கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை.

சென்ற வருட வெள்ளத்தால், டவுன்ஷிப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சாலையில் தற்காப்பு சுவரை அமைத்தது தமிழ்நாடு குடியிருப்பு வாரியம். ஆனாலும் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை, ஒரு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு எப்படி அனுப்ப முடியும் என்றெண்ணி வியக்கிறேன்'' என்கிறார்.

கடந்த வருட கன மழையால், திருமழிசையில் சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டுக்குப் பின்னால் இருந்த ஏராளமான வீடுகள் சேதமடைந்து நிற்பதை இன்னும் காணமுடிகிறது.

செம்பரம்பாக்கம் தெற்கு மாதா வீதியைச் சேர்ந்தவரான மோகன், அவர்களின் தெருவில் மழை நீர் ஒரு வாரத்துக்கும் மேலாகத் தேங்கி நின்றதாகக் கூறுகிறார். தற்போதைய தமிழ்நாடு குடிநீர் வாரிய டவுன்ஷிப்புக்கு அருகில் இருக்கும் தன் வீட்டின் சுற்றுச்சுவர், தண்ணீருக்கு அடியில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x