Published : 09 Nov 2014 09:08 AM
Last Updated : 09 Nov 2014 09:08 AM

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு: போலீஸார் தீவிர நடவடிக்கை

தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் நடத்திய விசாரணையில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பு, அல்காய்தா அமைப்புடன் இணைந்து இந்தியாவில் தீவிரவாத செயல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்களையும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய உளவுத்துறை எச்சரித்தது.

இந்த எச்சரிக்கை வந்த மறுநாளே கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு குண்டு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் தமிழகம் முழுவதும் 10 இடங்களில் குண்டு வைக்கப்போவதாக கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழு வதும் பாதுகாப்பை பலப்படுத்து மாறு அனைத்து காவல் நிலை யங்களுக்கும் டிஜிபி அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ்கள், தியேட்டர்கள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வளையத்தில் சென்னை

சென்னையின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக் கைகளில் போலீஸ் அதிகாரிகள் தீவிரம்காட்டி வருகின்றனர். முதல் கட்டமாக வணிக வளாகங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான சிறப்பு கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் சென்னையில் செயல்படும் பல்வேறு மால்கள், காம்ப்ளக்ஸ் களின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் 75 பேர் கலந்துகொண்டனர்.

சென்னையில் உள்ள மால்களில் பொருத் தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் போதுமானதாக இல்லை. அவற்றின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையை அமைக்க வேண்டும். வணிக வளாகங்களின் பார்க்கிங் பகுதிகளையும், நுழைவு வாயில் அருகில் இருக்கும் சாலை யையும் விரிவாக கண்காணிக் கும் வகையில் சக்தி வாய்ந்த கண்காணிப்பு கேமராக்களை வைக்க வேண்டும். பாது காவலர்களின் எண்ணிக்கையை 15 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும். வாடிக்கையாளர் களின் உடமைகளை சோதனை யிடும் ஸ்கேன் கருவிகளை உடனடியாக வைக்க வேண்டும்.

அவசர காலங்களில் மக்களை எப்படி வெளியேற்றுவது என்பது பற்றி பாதுகாவலர்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். கண்காணிப்பு கேமராவின் படங்களை துல்லியமாக பார்வையிட வசதியாக பெரிய அளவிலான திரைகளை நிறுவ வேண்டும். இதுகுறித்து இக்கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

ஆலோசனைக் கூட்டம்

நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத் துவது தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் வருகிற 11-ம் தேதியும், ரயில்வே பாதுகாப்பு படையினருடனான ஆலோ சனைக் கூட்டம் 27-ம் தேதியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடக்கிறது.

சென்னையில் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள் ளனர். சந்தேகப்படும்படியான நபர்களையோ, பொருட்களையோ பார்த்தால் உடனடியாக 044 - 28555069, 23452359, 9003130101 என்ற எண்களில் தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தி யுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x