

பவானியின் குறுக்கே 6 புதிய அணைகள் கட்டுவது பாசனத்துக்காகவா அல்லது வேறு காரணம் உள்ளதா என்ற குழப்பத்தில் அட்டப்பாடி விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.
கோவைக்கு மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கேரள மாநிலத்தின் அட்டப்பாடி பிரதேசம். இந்தப் பகுதியில் பவானி நதியும், தமிழக எல்லையோரம் முத்திக்குளம் பகுதியில் ஊற்றெடுக்கும் சிறுவாணி நதியும் கூட்டுப்பட்டியில் இணைந்து தமிழகத்துக்கு வருகிறது.
இந்த நதியின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சிறுவாணிக்கு குறுக்கே 1980-ல் அணைகட்டும் பணியைத் தொடங்கிய கேரள அரசு, தமிழக, கேரள மக்கள் எதிர்ப்பால் பணியை பாதியில் கைவிட்டது.
யில் இறங்கியது கேரள அரசு. தமிழகத்தில் மட்டுமல்லாது கேரள விவசாயிகள் ஒரு பிரிவினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த அணை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதேபோல தொடர்ந்து அணைகள் கட்ட முயல்வதும், மக்கள் எதிர்ப்பால் கைவிடுவதும் நீடித்தது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பவானியில் வீட்டியூர், பாடவயல், மஞ்சிக்கண்டி, தேக்குவட்டை, கீரைக்கடவு, ரங்கநாதபுரம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கியது. தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்ற போதிலும், தமிழக அரசியல் சூழல்களால் அணை கட்டும் பணியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் மார்ச் 12-ம் தேதி திமுக, காங்கிரஸ், தமாகா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள், விவசாய அமைப்புகள் இணைந்து தமிழத்தில் க.க.சாவடியில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளன.
தேக்குவட்டை அணை பணி முடிந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது இந்த விவகாரம் அட்டப்பாடி விவசாயிகளிடையே வேறுவிதமான பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
“இந்த 6 அணைகள் கட்டப்படுவது இங்குள்ள விவசாயிகள் பயன்பாட்டுக்கானதுபோல தெரியவில்லை?” என்ற சந்தேகத்தை அவர்கள் எழுப்புகின்றனர். இதுகுறித்து பாடவயல், மஞ்சிக்கண்டி கிராம விவசாயிகள் கூறியதாவது:
தற்போது தேக்குவட்டை தடுப்பணை பணிகள் 99 சதவீதம் முடிந்துவிட்டன. சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், மஞ்சிக்கண்டியில் அணை கட்டும் பணி தொடங்கி 15 நாட்களாகி விட்டது. இதனால் கீழே செல்லும் தண்ணீரின் அளவு குறைந்து, இங்கே தண்ணீர் தேங்கிநிற்கிறது. அதுமட்டுமல்லாது, மழை முற்றிலுமாக இல்லாததால், ஆற்றில் நீர்வரத்தும் குறைந்து விட்டது.
அதனால் தேக்குவட்டைக்கு கீழே உள்ள ஆற்றுப்பகுதி முழுவதும் வறண்டு காணப்படுகிறது. இதனால் அதிகாரிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே, இங்குள்ள விவசாயிகளிடம், ஆற்றில் மோட்டார் போட்டு தண்ணீர் உறிஞ்ச வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மழையில்லை, கடும் வறட்சி, எனவே ஆற்று நீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். யாரும் ஆழ்குழாய்க் கிணறு அமைக்கக் கூடாது. அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
மேலும், விவசாய மின் இணைப்புகளை மார்ச் 1-ம் தேதி முதல் துண்டிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாங்கள் இங்கே 15 ஆண்டுகளுக்கு மேலாக மோட்டார் பம்ப்செட் வைத்துத்தான் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, விவசாய நிலங்களுக்குப் பாய்ச்சி வருகிறோம். கோடைகாலத்தில் நீர்வரத்து குறைவாக இருந்தாலும்கூட மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரைத் தேக்குவதும், அதை கீழுள்ள கிராமத்துக்காரர்கள் தடுப்பதும் தொடர்ந்து நடக்கிறது. பிரச்சினை ஏற்படும்போது இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் அதிகாரிகள், பிரச்சினை இல்லாமல் தண்ணீரை எடுங்கள் என்றுதான் அறிவுறுத்துவார்கள்.
சாவடியூரில் காய்ந்து கிடக்கும் பவானி ஆறு.
மேலும், விவசாய மின் இணைப்புகளை மார்ச் 1-ம் தேதி முதல் துண்டிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாங்கள் இங்கே 15 ஆண்டுகளுக்கு மேலாக மோட்டார் பம்ப்செட் வைத்துத்தான் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, விவசாய நிலங்களுக்குப் பாய்ச்சி வருகிறோம். கோடைகாலத்தில் நீர்வரத்து குறைவாக இருந்தாலும்கூட மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரைத் தேக்குவதும், அதை கீழுள்ள கிராமத்துக்காரர்கள் தடுப்பதும் தொடர்ந்து நடக்கிறது. பிரச்சினை ஏற்படும்போது இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் அதிகாரிகள், பிரச்சினை இல்லாமல் தண்ணீரை எடுங்கள் என்றுதான் அறிவுறுத்துவார்கள்.
மேலும், இந்த ஆற்றுநீரை குடிநீருக்கு உபயோகப்படுத்தாதீர்கள். இது சுகாதாரமானதல்ல, அப்படியே எடுத்தாலும் காய்ச்சிக் குடியுங்கள் என்றும் வலியுறுத்துவார்கள். அல்லது ஆற்றில் நேரடியாக குடிநீருக்கு தண்ணீர் எடுக்காதீர்கள். ஆற்றுக்கு பக்கத்தில் சுனைதோண்டி அதிலிருந்து எடுங்கள் என்பார்கள். அவ்வாறு ஆற்று நீரை குடிநீராகப் பயன்படுத்தாதீர்கள் என்று கூறிய அதிகாரிகளே, இப்போது அதே ஆற்றுநீரை குடிநீருக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது வேடிக்கையாகவும், உள்நோக்கம் கொண்டதாகவும் தெரிகிறது.
அதிகாரிகள் அணைக்கு பக்கத்தில் அமைக்கும் மோட்டார் பம்ப்செட் மூலம் எடுக்கும் நீரை விவசாயத்துக்கு கொடுப்பார்களா? முன்பு அணையின் ஷட்டர் சாவிகள், மோட்டார் பம்ப்செட் அறை சாவிகள் அனைத்தையும் இங்குள்ள விவசாயிகளிடமே கொடுத்துவிடுவோம் என்று வாக்குறுதி அளித்தனர். இப்போது அதைப்பற்றி எதுவுமே அதிகாரிகள் சொல்வதில்லை.
தேக்குவட்டை அணையில் பம்ப்செட் வைக்கும் இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக, 2 நாட்களுக்கு முன் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தனர். அவர்களிடம் கேட்டபோது கூட, முறையான பதில் இல்லை. இப்போது இந்தப் பிரச்சனையை முனைவ்துத நாங்கள் போராடினால், எங்களை கேரள அரசுக்கு எதிரானவர்களாகவோ, தமிழ்நாட்டுக்கு ஆதரவானவர்களாகவோ திசைதிருப்பி விட்டுவிடும் என்பதால் பேசாமல் இருக்கிறோம். தற்போது நாங்கள் பயிரிட்டுள்ள தென்னை, பாக்கு, வாழை மரங்கள் நீரின்றி காய்ந்து கொண்டிருக்கிறது என்றனர்.
அட்டப்பாடியில் புதூர் ஊராட்சியில் உள்ள குடும்பங்களில் 60 சதவீதம் பேர் தமிழர்கள். ஏற்கெனவே முக்காலி பவானியிலும், சிறுவாணி சித்தூர் வெங்கக்கடவிலும் கேரள அரசு அணை கட்ட முயன்றபோது, தமிழகப் பகுதிகளுடன், கேரள பகுதியில் உள்ள புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களும் பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
எனவே, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுடன் புதூர், அகழிப் பகுதியில் உள்ள விவசாயிகளும் புதிய அணைகளுக்கு எதிராகப் போராடினர். இதனால், கேரள அரசு பின்வாங்கியது.
தற்போது புதிதாக கட்டப்படும் தடுப்பணைகள் இங்குள்ள மக்களின் பாசன வசதிக்கே என்று வாக்குறுதி கொடுத்தது கேரள அரசு. ஆனால், தற்போது இந்த அணைகள் கட்டப்படும் பகுதியில் உள்ள மக்களே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதால், என்ன செய்வதென்று புரியாமல் கேரள அதிகாரிகள் தவிக்கின்றனர் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.