அதிமுக பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது பாஜக: பிரகாஷ்காரத் குற்றச்சாட்டு

அதிமுக பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது பாஜக: பிரகாஷ்காரத் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் லோகநாதனை ஆதரித்து தண்டையார்பேட்டையில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசினார்.

அவர் பேசியதாவது, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுகவின் எதிர்காலத்தை மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் தேர்தல். இத்தேர்தலில் 3 வேட்பாளர்கள் நாங்கள்தான் ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு என்று கூறுகிறார்கள்.

ஜெயலலிதா, எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை. தமிழக மக்கள்தான் என் குடும்பம் என்றார். எனவே உறவினர் என்று சொல்லி வாக்கு கேட்பவர்களை ஆர்கே நகர் மக்கள் புறக்கணிக்க வேண்டும். சசிகலாவின் ஆதரவு பெற்ற தினகரனும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டு அணிகளும் ஆட்சி அதி காரத்தை பயன்படுத்தி ஊழலில் திளைத் தவர்கள். தினகரன், மதுசூதனன் இந்த இரு வரில் யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் மத்திய பாரதிய ஜனதா அரசின் நிர்பந்தத்துக்கு அடிபணிய வேண்டிய நிலை ஏற்படும். ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே பாரதிய ஜனதாவோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர். அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பவர். தினகரன் மீதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. தினகரன் மீது அந்நிய செலவாணி மோசடி வழக்கும் உள்ளது. எனவே அவர் வெற்றி பெற்றால் மத்திய அரசுக்கு பணிந்து நடக்க வேண்டி இருக்கும். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் தங்களது மதவாத திட்டங்களை செயல்படுத்தவும், காலூன்றவும் பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு வருகிறது.

அதிமுகவுக்கும், திமுகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருவரும் ஊழல்வாதி கள். ஒரே பொருளாதார கொள்கையை பின் பற்றுபவர்கள். மாற்று அரசியலை முன்னெடுப் பதற்காக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் வலுவான மாற்று அரசியல் உருவாக மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆர்.கே.நகர் மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்று பேசினார்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் வாசுகி, வேட்பாளர் லோகநாதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in