Last Updated : 19 Apr, 2014 10:19 AM

 

Published : 19 Apr 2014 10:19 AM
Last Updated : 19 Apr 2014 10:19 AM

மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை வங்கியில் நேரடியாக செலுத்தப்படும்: புதிய திட்டம் இந்தாண்டு அறிமுகம்

தமிழகத்தில் மீன்பிடி தடை கால நிவாரணத் தொகையை தகுதியில்லாதவர்கள் பெறுவதைத் தடுக்க விண்ணப்பதாரரின் விவரம் துறையில் உள்ள ஆவணத்துடன் சரிபார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தாண்டு முதல் வங்கியில் நேரடியாகப் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படுகிறது என்று மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை 45 நாட் களுக்கு ஆழ்கடலில் விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

இந்த நாட்களில் கடலுக்குப் போக முடியாமல் பாதிக்கப்படும் மீனவ குடும் பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் தமிழக அரசு வழங்குகிறது. இத் தொகை போது மானதாக இல்லை என்றும், கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரி வருகின்றனர்.

இதுகுறித்து அகில இந்திய மீனவ சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் பி.ரவி கூறுகையில், “மீன்பிடி தடை காலத்தில் தமிழகத்தில் 13 கட லோர மாவட்டங்களில் உள்ள 75 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர். மீனவ கூட்டுறவு சங்கங்களில் 35 லட்சம் பேர் உறுப்பினர் களாக இருக்கின்றனர். ஆனால், அனைவருக்கும் நிவாரண உதவி கிடைப்பதில்லை. ஒரு குடும்பத்தில் அப்பா, மகன், மருமகன் எனப் பலரும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், குடும்ப அட்டையில் பெயர் உள்ள குடும்பத் தலைவருக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படுகிறது. அனை வருக்கும் தினமும் ரூ.200 வீதம் 45 நாட்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடலில் மீன்பிடிப்பவர்கள் 8.75 லட்சம் பேரும், மேட்டூர், சாத்தனூர் உள் ளிட்ட அணைகள் மற்றும் நீர்நிலைக ளில் மீன்பிடிப்பவர்கள் 2.50 லட்சம் பேரும் உள்ளனர். தூத்துக்குடி மற்றும் சென்னைத் துறைமுகம், வங்கி, மின்சார வாரியம், பள்ளிக்கூடம், காவல் துறை உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களும், ஆட்டோ ஓட்டு நர்களும் மீன்பிடி தடை கால நிவார ணம் விண்ணப்பித்துள்ளதாக புகார் வந்துள்ளது. அதனால், துறையிடம் உள்ள ஆவணங்களுடன் விண்ணப்பதாரரின் விவரங்கள் சரிபார்க்கப்படு கின்றன.

இதை தொடர்ந்து சிலர் தாமாக முன் வந்து தாங்கள் அரசு மற்றும் தனியார் வேலையில் சேர்ந்துவிட்டதால் தங் களுக்கு நிவாரணம் தேவையில்லை என எழுதிக் கொடுத்துள்ளனர்.

மீன்பிடி தடை கால நிவாரணத் தொகையைப் பொருத்தவரை முழு நேரம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட் டுள்ள அனைவருக்கும் அது தவறாமல் வழங்கப்படுகிறது.தகுதியானவர்க ளுக்கு எளிதாகவும், விரைவாகவும் நிவாரணம் போய்ச் சேருவதற்காக தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (Natio nal Electronic Fund Transfer) என்ற புதிய முறை மூலம் மீனவ குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x