

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நகைக் கடைகளில் நேற்று மாலை முதல் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் 30 முதல் 40 சதவீதம் வரை வர்த் தகம் அதிகரித்துள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு பிறக்கும்போது தங்க நகை வாங்கினால், ஆண்டு முழுவ தும் குடும்பத்தில் செல்வம் அதிகரிக் கும் என்பது மக்களின் நம்பிக்கை யாக இருக்கிறது. இதேபோல், தை மாதத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்களும் நேற்று மாலை முதலே நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை 5 மணி முதலே தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள நகைக் கடை களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னையில் மயிலாப்பூர், தியாகராயர் நகர், பிராட்வே, புரசை வாக்கம், தாம்பரம், வேளச்சேரி, குரோம்பேட்டை, அடையார், கதீட்ரல் சாலை, பெரம்பூர், போரூர் உள்ளிட்ட இடங்களில் நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “புத்தாண்டு பிறக்கும்போது, கையில் புதிய தங்க நகை இருக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு எங்கள் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மூலம் வாடிக்கையாளர்கள் மீண்டும் கடைகளுக்கு வரத் தொடங்கிவிட்டனர்.
வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு புதிய வடிவங்களில் நகைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளோம். சனிக்கிழமை மாலை 5 மணி முதல் மக்கள் கூட்டம் வரத் தொடங்கிவிட்டது. வழக்கமான நாட்களை காட்டிலும் கூடுதலாக 2 மணிநேரம் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. கூட்டமும் அதிகமாக இருந்ததால் வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் வரையில் வர்த்தகம் அதிகரித்தது” என்றார்.