Published : 14 Jun 2017 11:01 AM
Last Updated : 14 Jun 2017 11:01 AM

புதுவையில் ரேஷனில் மளிகைப் பொருட்கள் கிடையாது: இலவச அரிசிக்கே பணம் இல்லை - அமைச்சர் கந்தசாமி தகவல்

ரேஷனில் வழங்கப்படும் இலவச அரிசிக்கே இரு மாதங்களாக பணம் தர முடியவில்லை. இந்த சூழ்நிலையில் மளிகைப் பொருட்கள் தர இயலாது என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:

அரசு கொறடா அனந்தராமன்: ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் தர அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் கந்தசாமி : நிதியில்லை ரேஷனில் வழங்கும் அரிசிக்கே பணம் இரு மாதங்களாக தரவில்லை. ஆளுநருக்கு கோப்பு அனுப்பிதான் அனுமதி வாங்குகிறோம். அதனால் மளிகைப் பொருட்கள் வழங்க இயலாது.

அன்பழகன் : நிதி இல்லை என்கிறீர்கள்! ரேஷன் ஊழியர்களுக்கு பல மாதங்கள் சம்பளமும் போடவில்லை.

அமைச்சர் கந்தசாமி: இன்று பேச்சுவார்த்தை இருக்கிறது. அதில் முடிவு எடுக்கிறோம். 250 கோடிக்கு இலவச அரிசி போடுறோம். ரூ. 12 கோடி ஊதியத்திற்கு ஆகிறது. கடந்த என்.ஆர்.காங்கிரஸ் அரசு பாக்கி வைத்து விட்டது. அதை சரி செய்ய போராடுகிறோம்.

துணைசபாநாயகர் சிவகொழுந்து: ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் இல்லை.

கந்தசாமி : சொந்த பணத்தில் கட்டுங்கள். திறந்து வைக்கிறோம். ஊழியர்களுக்கு சம்பளமே போட முடியாத நிலையில் இருக்கிறோம்.

அரசு கொறடா : அரிசி போடுவது தவிர வேறு வேலையில்லை. அவர்களுக்கு மாற்று வழி கண்டறிந்து ஊதியம் தரலாமே.

கந்தசாமி : ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x