

ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று(சனிக்கிழமை) நடைபெற்ற நிலையில், தேர்வு எழுத தத்தம் மனைவியை அனுப்பிவிட்டு குழந்தைகளுடன் கணவன்மார்கள் வெளியே காத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.
இதைத் தொடர்ந்து தேர்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
’