

‘பீப்’ பாடல் விவகாரத்தில் நேரில் ஆஜராக 15 நாட்கள் கூடு தல் அவகாசம் கேட்டு அனிருத் தரப்பு வழக்கறிஞர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் மனு அளித்தார்.
கடந்த டிச.10-ம் தேதி இணையதளத்தில் வெளியான ‘பீப்’ பாடல் தொடர்பாக, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனி ருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த டிச.12-ம் தேதி மாதர் சங்கத்தினர், கோவை மாநகர போலீஸில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், இழிவு படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவு களின்கீழ் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய் தனர்.
ஜன. 2-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சிம்பு, அனிருத் இருவருக்கும் 2-வது முறையாக போலீஸார் அழைப்பாணை அனுப்பினர்.
இந்நிலையில், நேற்று (ஜன.2) இசையமைப்பாளர் அனிருத் தரப்பில், அவரது வழக்கறிஞர் செந்தில்குமார், ரேஸ்கோர்ஸ் காவல்நிலைய ஆய்வாளர் செல்வ ராஜிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், அனிருத் நேரில் ஆஜ ராக 15 நாட்கள் அவகாசம் வேண்டுமென தெரிவித்திருந்தார்.
போலீஸார் கூறும்போது, ‘நேரில் ஆஜராக 15 நாள் அவகாசம் கேட்டுள்ளனர். மேலும் ‘பீப்’ பாடலை அனிருத் பாடவோ, இசையமைக் கவோ இல்லை எனவும், தற் சமயம் வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற் றிருப்பதால் அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை’ எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனிருத்துக்கும், அப்பாடலுக்கும் தொடர்பில்லை என நடிகர் சிம்பு கூறியதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.