

ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நக்ஸ லைட் மகாலிங்கம் நேற்று ஆஜர் படுத்தப்பட்டார்.
தேனி மாவட்டம், வருசநாடு வனப்பகுதியில் பதுங்கி ஆயுதப் பயிற்சி எடுத்ததாக தேவாரம் அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்த நக்ஸலைட் மகாலிங்கம்(62) என்ப வரை, கடந்த 2007-ம் ஆண்டு நவ. 20-ம் தேதி தேனி கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில், கடந்த 2011-ம் ஆண்டு ஜாமீன் பெற்று சென்ற வர் தலைமறைவானார். இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த ஆண்டிபட்டி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருந்தவரை கடந்த மாதம் 25-ம் தேதி சென்னை கியூ பிரிவு போலீஸார் கைது செய்து ஆண்டிபட்டி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
நேற்று நடந்த வழக்கின் விசா ரணைக்காக பலத்த பாதுகாப்பு டன் ஆண்டிபட்டி நீதிமன்றத்துக்கு மகாலிங்கத்தை அழைத்து வந்து மாஜிஸ்திரேட் பாஸ்கரன் முன்னி லையில் போலீஸார் ஆஜர்படுத் தினர்.
இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ் திரேட் விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தர விட்டார். இதனையடுத்து, மீண்டும் அவர் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.