

ஸ்டான்லி அரசு மருத்துவமனை யில் நேற்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்டான்லியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் முதல் தளத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவின் 701-வது அறையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. இதனால் அறை முழுவதும் புகை மூட்டம் உருவானது. அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சை பெற்று வந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். அவர்களே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவ மனை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.