

முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை காவல்துறையைச் சேர்ந்த என்.சரவணன், ஏ.கிருஷ்ண மூர்த்தி, ஏ.சிவபெருமாள், ஆர்.சொர்ணசுந்தரம் ஆகியோர் உடல்நலக் குறைவால் இறந்தனர். அதேபோல், மதுரையைச் சேர்ந்த சி.ராஜமாணிக்கம், நெல்லை உதவி ஆய்வாளர் பி.சங்கரபாண்டியன், பெரம்பலூர் உதவி ஆய்வாளர் தாமஸ் தர்மராஜ், ஈரோடு மாவட்ட காவலர் எம்.சரவணன், நாகை சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன், வேலூர் தலைமைக் காவலர் மனோகரன் ஆகியோரும் உடல் நலக்குறைவால் இறந்தனர்.
மதுரை தலைமைக் காவலர் கள் எஸ்.சுப்பையா, ஜெயபாண்டி, தேனி மாவட்ட காவலர் ராஜேஷ் வரன், ஈரோடு உதவி ஆய்வாளர் டி.பிரகாசம், வேலூர் சிறப்பு உதவி ஆய்வாளர் என்.மூர்த்தி, சென்னை காவலர் வி.நவீன்குமார் ஆகியோர் சாலை விபத்துகளில் இறந்தனர். மேலும், மதுரை திருநகர் காவல் நிலைய தலைமைக் காவலர் கே.மதுரைச்சாமி, கண்மாயில் குளிக்கச் சென்றபோதும், நெல்லை பயிற்சிக் காவலர் எஸ்.சந்தோஷ் குமார் மணிமுத் தாறில் குளிக்கும் போதும் நீரில் மூழ்கி இறந்தனர்.
குரோம்பேட்டை மின்வாரியத் தில் மஸ்தூராக பணியாற்றிய உதயகுமார், தருமபுரி கம்பி யாளர் கோவிந்தராஜ், திருவண் ணாமலை பாண்டியன் ஆகியோர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர். பெரம்பலூரைச் சேர்ந்த மின்வாரிய மஸ்தூர் இமயவரம்பன், மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்ததில் இறந்தார்.
இந்த 23 பேரின் குடும்பங் களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.