மாணவர் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்

மாணவர் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் இறந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள் ளார்.

மாணவர் முத்துகிருஷ்ணன் மரணத்துக்கு நீதி கேட்டு திருச்சி உறையூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மிகச்சிறந்த அறிஞர்களை உருவாக்கி பெருமை சேர்த்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஓரிரு ஆண்டு களாக கொலைக்களமாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது. தற் போது அங்கு தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறை யினர் கூறியுள்ளனர். ஆனால், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவர் கோழை அல்ல என முத்துகிருஷ்ணனின் பெற் றோரும், குடும்பத்தினரும் கூறியுள் ளனர்.

மேலும், முத்துகிருஷ்ணன் தனது முகநூலில், “இங்கு சேரவும், படிக்கவும், ஆசிரியர்களிடமும் சமத்துவம் இல்லை. சாவதற்கு மட்டுமே சமத்துவம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து, அவரது மரணம் தற்கொலை அல்ல, அதில் மர்மம் உள்ளது என்பது தெரிகிறது.

மோடி தலைமையிலான ஆட்சி வந்த பிறகு இதுபோன்ற மரணங்கள் அதிகரித்துள்ளன. முத்துகிருஷ்ணன் மரணம் குறித்த உண்மைகள் வெளிவர, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். முத்துகிருஷ்ணனின் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.3 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல, ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும். அதே போல மத்திய அரசும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றார்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் (ஏஐடியுசி) எஸ்.நாகேந் திரநாத் ஓசா செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாணவர் முத்து கிருஷ்ணன் மரணம் குறித்து, நீதி விசாரணை நடத்த மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வலுவான அழுத்தம் தர வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in