

திமுக பொதுச் செயலாளர் க.அன் பழகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவரா கப் பொறுப்பேற்றுள்ளார். கூடுத லாக திமுக இளைஞர் அணிச் செயலாளராகவும் பொறுப்பு வகிக் கிறார். எனவே, அவருக்கு பதிலாக கட்சியின் சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி இளைஞர் அணிச் செயலாளராக மு.பெ.சாமிநாதன், இணைச் செயலாளராக சுபா.சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப் படுகின்றனர். ஏற்கெனவே உள்ள இளைஞர் அணி துணைச் செய லாளர்களுடன் இணைந்து இவர் கள் பணியாற்றுவார்கள்’’ என தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனான ஸ்டாலின் 14 வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத் தார். 1967-ல் ‘கோபாலபுரம் இளைஞர் திமுக’ என்ற அமைப்பை ஏற்படுத்தி சென்னை மாநகராட்சித் தேர்தலில் பிரச்சாரம் செய்தார். 1980-ல் ஏற்படுத்தப்பட்ட திமுக இளைஞர் அணிக்கு முதலில் அமைப்பாளராக இருந்த ஸ்டாலின், 1984-ல் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். திமுகவின் முதல் இளைஞர் அணிச் செயலாளர் அவர்தான்.
சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என ஆட்சி, அதிகாரத்திலும், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் என கட்சியிலும் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தாலும், இளைஞர் அணிச் செயலாளர் பதவியை மட்டும் ஸ்டாலின் கடந்த 32 ஆண்டுகளாக விட்டுக்கொடுக்கவில்லை.
‘60 வயதைக் கடந்தவர் இளைஞர் அணிச் செயலாளரா?’ என்ற விமர்சனம் பலமுறை எழுந்தது. அப்போதுகூட, ‘இளைஞர்களுக்கு வழிகாட்டும் இந்தப் பதவிதான் எனக்கு உற்சாகம் தருகிறது’ என ஸ்டாலின் கூறிவந்தார்.
இதற்கிடையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீட்டில் ஓய்வில் உள்ளார். இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி நடந்த திமுக பொதுக்குழுவில் கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப் பட்டார்.
52 வயதாகும் சாமிநாதன்
இந்நிலையில், திமுக இளை ஞர் அணியின் புதிய செயலாள ராக மு.பெ.சாமிநாதன் நியமிக்கப் பட்டுள்ளார். 52 வயதான சாமிநாதன் கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர். இளைஞர் அணி துணைச் செயலாளர் உள்ளிட்ட பல் வேறு பொறுப்புகளை வகித்தவர். ஸ்டாலினுக்கு நெருக்கமான அவருக்கு திமுகவில் மிக முக்கிய மான பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.