

மனிதக் கண்டுபிடிப்புகளுள் மிக முக்கியமானது மொழிதான் என்று கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக் கோட்டை அடுத்துள்ள திரூரில் மலையாள இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படும் எழுத்தச்சன் திருவிழா சனிக்கிழமை (28.01.2017) நடைபெற்றது. அந்த விழாவில் ‘சிறிது நேரம் மனிதானாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மொழிபெயர்க் கப்பட்ட வைரமுத்து சிறுகதைகள் நூலை ஞானபீட விருதுபெற்ற மூத்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசு தேவன் நாயர் வெளியிட்டார். கேரள சாகித்ய அகாடமியின் செயலாளர் மோகனன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இந்த நூலை கே.எஸ்.வெங்கிடாசலம் மொழிபெயர்த்துள்ளார். மாத்ருபூமி வெளியிட்டது.
விழாவைத் தொடங்கி வைத்து கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
மனித இனத்தின் கண்டுபிடிப்பு களில் முக்கியமானதென்று சில வற்றை முன்னிலைப்படுத்துகிறார் கள். தீ, இரும்பு, சக்கரம், நீராவிப் பொறி, மின்சாரம், கணிப்பொறி என்று நீளும் அந்தப் பட்டியல் மிக முக்கியமான ஒன்றை மறந்துவிடு கிறது. அதுதான் மொழி. மனிதக் கண்டுபிடிப்புகளுள் மிக முக்கிய மானது மொழிதான்.
இந்திய இலக்கியத்தின் பன் முகப் பண்பாடு என்ற தலைப் புக்குள் போகும்போது இந்திய மொழிகளின் எண்ணிக்கை என் னைத் திகைக்க வைக்கிறது. ஐரோப் பியக் கண்டத்தைவிடப் பெரியதான இந்தியாவில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டவை மட்டும் 22. இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 1652. இத்தனை மொழிகள் கொண்ட தேசம் ஒரு குடையின்கீழ் இருப்பது தான் நமது பெருமை.
இமயத்தில் வில்பொறித்த சேரன் செங்குட்டுவனின் தீரமும், கடா ரத்தை வென்றெடுத்த ராஜராஜனின் வீரமும்தான் இன்று தமிழ் மக்களை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப் பரிக்க வைத்திருக்கிறது. ஆட்களும் நாட்களுமே மாறிக்கொண்டிருக் கிறார்கள். வாழ்க்கை வாழ்க்கை யாகவே இருக்கிறது.
பன்முகப் பண்பாடு என்பது இந்தியாவைக் கண்ணுக்குத் தெரி யாமல் கட்டி வைத்திருக்கும் ஒரு தங்கச் சங்கிலி. அது வளர்த்தெடுக் கப்பட வேண்டும். அதற்கென்று ஒரு தனி அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதில் இந்தியாவின் சிறந்த படைப்பாளிகளுக்குப் பாரத ரத்னா விருது போல ‘பாஷாரத்னா’ என்ற விருது வழங்கப்பட வேண்டும். மலையாள மண்ணுக்கு நன்றி என்ற வைரத்தையும் அன்பென்ற முத்தையும் கொண்டு வந்தேன். இரண்டையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறேன்.
இவ்வாறு வைரமுத்து பேசினார்.
எம்.டி.வாசுதேவன் நாயர் பேசும் போது, “வைரத்து எழுதிய ‘சின்னச் சின்ன ஆசை’ பாடல் எங்கள் மலை யாள மண்ணில் இன்னும் ஒரு தாலாட்டாகவே ஒலித்துக்கொண் டிருக்கிறது. ‘வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை’ என்ற வரி கற்பனை யின் உச்சமாகும்!’’ என்றார்.