விபத்துகளை தடுப்பதுடன் பணியாளர் நலனிலும் அக்கறை செலுத்துங்கள்: தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுரை

விபத்துகளை தடுப்பதுடன் பணியாளர் நலனிலும் அக்கறை செலுத்துங்கள்: தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுரை
Updated on
1 min read

தொழிற்சாலைகளில் விபத்துகளை தடுப்பதுடன் பணியாளர் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பாதுகாப்பு குழும தமிழ்நாடு பிரிவு சார்பில் மனித ஆற்றல் மற்றும் பாது காப்பு நிபுணர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற் றது. இந்த கருத்தரங்கை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் பி.போஸ் தொடங்கி வைத்தார். மனித ஆற்றல் மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு தொடர் பான விவரங்கள் அடங்கிய பயிற்சி கையேட்டை வெளியிட்டு அவர் பேசியதாவது:

தொழிற்சாலைகளில் பாதுகாப்பு கலாச்சாரத்தை பரவலாக்குவது என்பது மனித ஆற்றல் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் கூட்டுப் பொறுப்பு மட்டுமல்ல காலத்தின் கட்டாயமும்கூட. தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் விபத்துகளை தவிர்ப்பதோடு பணி யாளர்களின் நலனை காப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும். இதற்கு மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை யின் ஒருங்கிணைப்பு இன்றியமை யாதது.

மனித ஆற்றல் மேம்பாட்டு நிபுணர் களை தேர்வு செய்யும்போது தொழிற் சாலை பாதுகாப்பு குறித்த எண்ணத் தையும் ஆராய வேண்டியது அவசியம். அவ்வாறு செய்யாவிட்டால், தொழிற்சாலைகளில் பின்னர் ஏற்படும் விபத்துகள் காரணமாக பணியாளர்கள் நிறுவனத்தைவிட்டு விலகும் நிலை ஏற்படலாம். நல்ல பணியாளர்களை தேர்வுசெய்தால் அது தொழிற்சாலை பாதுகாப்புக்கு வழிவகை செய்யும். அதன் மூலம் உற்பத்தி அதிகரித்து தொழில் வளர்ச்சி மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘தொழில்சார் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு: சட்டத்தின் கண்ணோட்டம்’ என்பது குறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் எஸ்.ஆனந்தும், ‘பணித் தேர்வு, பயிற்சி, மேம்பாடு' குறித்து என்டிபிசி தமிழ்நாடு எரிசக்தி நிறுவன மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை துணை பொதுமேலாளர் எம்.நிஜாமுதீனும் உரை யாற்றினர். முன்னதாக, தேசிய பாது காப்பு குழும தமிழ்நாடு பிரிவு துணைத் தலைவர் டி.பாஸ்கரன் வரவேற்றார். செயலாளர் பி.ராஜ்மோகன் கருத்தரங்கம் குறித்து அறிமுக உரையாற்றினார். நிறைவாக, பொருளாளர் கே.ஜெகநாதன் நன்றி கூறினார்.

இந்த கருத்தரங்கில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து 242 மனித ஆற்றல் மேம்பாடு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in