சுவாதி கொலை வழக்கு: ராம்குமார் வீட்டில் முக்கிய தடயங்கள்

சுவாதி கொலை வழக்கு: ராம்குமார் வீட்டில் முக்கிய தடயங்கள்
Updated on
1 min read

ராம்குமார் வீட்டில் முக்கிய தடயங்கள்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரில் உள்ள ராம்குமாரின் வீட்டில் தனிப்படை போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையிலான தனிப்படையினர், வருவாய்த் துறை அலுவலர்கள் சோதனை நடத்தியதில் முக்கிய தடயங்கள் சிக்கியதாக தெரிகிறது.

வீட்டுக்குள் இருந்த செல்போன் கைப்பற்றப்பட்டது. இதேபோல், ராம்குமார் சில தாள்களில் எழுதி வைத்திருந்த குறிப்புகளும், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு பயணம் செய்த டிக்கெட் உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. வீட்டைச் சுற்றிலும் இன்ஸ்பெக்டர் பிரதாபன் தலைமையில் 10-க் கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் கட்டுப்பாட்டில் மருத்துவமனை

சுவாதி கொலை வழக்கில் பிடி பட்ட ராம்குமாருக்கு திருநெல் வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அம் மருத்துவமனை வளாகம் முழு வதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

நேற்று ராம்குமார் சென் னைக்கு அழைத்துச் செல்லப் பட்டபோது அரசு மருத்துவமனை யின் 4 வாயில்களிலும் ஏராள மான போலீஸார் குவிக்கப்பட்ட னர். ஏற்கெனவே அங்கு பணி யில் இருந்த தனியார் செக்யூ ரிட்டிகளை வெளியே அனுப்பிவிட்டனர்.

ராம்குமார் மீது 2 வழக்குகள்

ராம்குமார் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை போலீஸார், அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராம்குமார் கைது செய்யப்பட்ட பகுதி செங்கோட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எல்லைக்கு உட்பட்டது என்பதால், அவரை அங்கு உள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் ராம்குமாரின் உடல்நிலை கருதி செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாஜிஸ்திரேட் வந்து, ராம்குமாரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் செங்கோட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் விடுப்பில் உள்ளதால் திருநெல்வேலி 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ராம்தாஸ், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று வந்து ராம்குமாரின் உடல்நிலை குறித்து பதிவு செய்து, காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். ராம்குமாரின் தந்தை பரமசிவன், தாயார் புஷ்பம் ஆகியோரை விசாரணைக்காக போலீஸார் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in