

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலை வர் சு.திருநாவுக்கரசர் புதுக் கோட்டையில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி:
அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப் பத்துக்குக் காரணம் பிரதமர்தான். பாஜக எந்தச் சூழலிலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால் தமிழகம் என்ற குட்டையைக் குழப்பி அதில் மீன் பிடிக்க பாஜக நினைக்கிறது.
தமிழகத்தில் நிலவும் அசாதா ரண நிலையை ஆளுநர்தான் சரிசெய்ய முடியும். இதுகுறித்து அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவருக்கு பதவிப் பிரமாணம் செய்வது வைப்பது ஆளுநரின் கடமை. ஆனால், தமிழகத்துக்கு ஆளுநர் வருகையில் ஏற்பட்ட தாமதத்தைப் பார்க்கும்போது, அதில் அரசியல் தலையீடு இருப்பதாகவே தெரி கிறது என்றார்.