

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் வீட்டில் இருந்து ரூ.10 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதிகாலை தொடங்கிய இச்சோதனை நேற்று இரவு வரை நடைபெற்றது. இச்சோதனையில், சரத்குமாரின் வீட்டில் இருந்து ரூ.10 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.