

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மெரினாவில் இளைஞர்கள் கூடுவதாக கிடைத்த தகவலால் மெரினாவில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நெடுவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வரு கிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலை யில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்து கையெழுத்து போட்டிருப் பதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள நெடுவாசல் மக்கள், மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இளைஞர்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மெரினாவில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முகநூலில் தகவல்கள் பரவின. இதைத் தொடர்ந்து நேற்று மதியத்தில் இருந்து போலீஸார் மெரினா கடற்கரையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு கடைகள் வைத்திருந்தவர்களை கட் டாயப்படுத்தி மூடவைத்தனர். கூட்ட மாக நின்றவர்களை கலைந்துபோகச் செய்தனர். ரோந்து பணியையும் தீவிரப் படுத்தினர். படகில் வரும் மீனவர்களை யும் விசாரித்த பின்னரே அனுப்பினர்.
நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுமார் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்ட மாக வந்த இளைஞர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் நேற்று மாலையில் மெரினாவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மெரினாவை தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரை யிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துணை ஆணையர் எச்சரிக்கை
மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடு களை ஆய்வு செய்த துணை ஆணை யர் பாலகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறும்போது, “மெரினாவில் இளை ஞர்கள் கூடப் போவதாக சமூக வலை தளங்கள் மூலம் வதந்தி பரப்புபவர் கள் கைது செய்யப்படுவார்கள். வதந்தி களால் போலீஸாரின் பணிச்சுமை அதிகரிக்கிறது” என்றார்.