

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மையத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''தற்போது வங்கக் கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில், மேலடுக்கு சுழற்சியோ, காற்றழுத்த தாழ்வு நிலையோ இல்லை. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டங்களுடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் இருக்கும்'' என்று அவர் கூறினார்.