

சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் கேஎன்கே டெப்போ அருகே மெகா வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
அருணோதயா குழந்தை தொழிலாளர் மையம் ஏற்பாடு செய்துள்ள இந்த முகாமில் பிபிஓ, சாப்ட்வேர், டேட்டா என்ட்ரி, ஹவுஸ் கீப்பிங், கால்சென்டர், மார்க்கெட்டிங், டெலி காலிங், சேல்ஸ் என பலதரப்பட்ட பிரிவுகளில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்.
இந்த முகாமில், எச்டிஎப்சி லைப் இன்சூரன்ஸ், லைப் ஸ்டைல், நைன் ஸ்டார்ஸ், ரூன்வாஸ் சுசூகி, கடம்பா டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்ய இருக்கின்றன. 17 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் முகாமில் பங்கு கொண்டு தங்கள் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப வேலை வாய்ப்பினை பெறலாம்.
முகாமுக்கு வரும்போது கல்விச் சான்றிதழ்கள், இருப்பிடச்சான்று (அசல் மற்றும் நகல்), பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 95510-51083, 98842-66716 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அருணோதயா குழந்தை தொழிலாளர் மையம் அறிவித்துள்ளது.