போராட்டக்காரர்களின் நாகரிகமான நடவடிக்கை: போலீஸார் பாராட்டு

போராட்டக்காரர்களின் நாகரிகமான நடவடிக்கை: போலீஸார் பாராட்டு
Updated on
1 min read

மெரினா போராட்ட களத்தில் பகலில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இரவில் இந்த எண்ணிக்கை சுமார் 5 ஆயிரமாக உயர்ந்தது. கூட்டம் கூடினாலும் சிறு அசம்பாவித சம்பவம்கூட அங்கு நடைபெறாமல் போராட்டக்காரர்கள் பார்த்துக் கொண்டனர். அவர்கள் சாலை ஓரத்தில் நடை பாதையில் மட்டுமே அமர்ந்தி ருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் சிறு சம்பவத்திலும் ஈடுபடவில்லை.

செய்தி சேகரிக்க சென்ற பத்திரி கையாளர்கள் சாலையில் இறங்கி நிற்க, அவர்களையும்கூட பக்குவமாக பேசி நடைமேடைக்கு வர வைத்தனர் போராட்டக்காரர்கள். தாங்கள் சாப்பிட்ட பிறகு சேர்ந்த குப்பைகளை அவர்களே மொத்தமாக சேகரித்து குப்பை தொட்டியில் போட்டனர்.

போராட்டக்காரர்களின் நாகரிகமான நடவடிக்கைகளை பார்த்து போலீ ஸாரே அவர்களை பாராட்டினர். அந்த வழியாக பேருந்தில் சென்ற பயணிகளிடம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in