

ஆர்.கே.நகர் தேர்தலை கண் காணிக்க டெல்லியில் இருந்து ஒரு அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் வருகிற 12-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது. இத் தேர்தலை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தில் நிதிப்பிரிவு இயக்குநராக இருக்கும் விக்ரம் பத்ராவை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் உட்பட தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னைக்கு விக்ரம் பத்ரா வருகிறார்.