நாளிதழ் எரிப்பு வழக்கை இழுத்தடிக்கும் எதிரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரி இன்று சிபிஐ மனு தாக்கல்

நாளிதழ் எரிப்பு வழக்கை இழுத்தடிக்கும் எதிரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரி இன்று சிபிஐ மனு தாக்கல்
Updated on
1 min read

நாளிதழ் எரிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசார ணையை இழுத்தடிக்கும் எதிரி களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கோரி, சிபிஐ சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

மதுரையில் நாளிதழ் அலுவ லகத்தில் 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வினோத், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய ஊழியர்கள் கொல்லப் பட்டனர். இது தொடர்பாக, அட்டாக்பாண்டி உட்பட 17 பேர் மீது சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 17 பேரையும் மதுரை சிபிஐ நீதிமன்றம் 9.12.2009-ல் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், வினோத்தின் தாயார் பூங்கொடி சார்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2011-ல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஒத்துழைக்காத எதிரிகள்

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை கடந்த 5 ஆண்டுகளாக இழுத்தடித்து, விசாரணைக்கு ஒத்துழைக்காத எதிரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பது தொடர்பாக சிபிஐ பதில ளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திட்டமிட்டு இழுத்தடிப்பு

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.சிவகுமார், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை எதிரிகள் தரப்பில் திட்டமிட்டு இழுத்தடிக்கப்படுகிறது. எதிரிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கோரி சிபிஐ மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை.

எதிரிகளுக்கு நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எதிரிகள் விசாரணைக்கு ஒத்துழைக்காத நிலையிலும், இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியும் என்றனர்.

விசாரணை ஒத்திவைப்பு

உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர். சுவாமிநாதன் வாதிடும்போது, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த சிபிஐ தயாராக உள்ளது. வழக்கில் எதிரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கோரி சிபிஐ தரப்பில் இன்று (ஜன. 20) மனு தாக்கல் செய்யப்படும் என்றார். பின்னர் விசாரணையை நாளைக்கு (ஜன. 21) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in